விவசாய வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திய ராஜ்நாத் சிங்..!

Default Image

இன்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் விவசாய வல்லுநர்களுடன் வேளாண் சட்டங்கள் குறித்து ஒரு ஆலோசனை நடத்தினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தேசிய விதை சங்கத்தின் தலைவர் எம். பிரபாகர் ராவ், சமீபத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய மூன்று வேளாண் சட்டங்கள் விதை தொழில்துறையின் வளர்ச்சியை அதிகரிக்கும். இது விதைத் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு பயனளிக்கும், இந்த முடிவில் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள் என   தெரிவித்தார்.

பின்னர் பேசிய சஞ்சீவ் சாதா, வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு தங்கள் விளைபொருட்களை எங்கும் விற்க சுதந்திரம் கிடைக்கிறது. உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளால் அமைக்கப்பட்ட சிறிய மண்டியில் கூட அவர்கள் இதை விற்கலாம் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்