ராஜஸ்தான் : பேருந்து மீது மோதிய டேங்கர் லாரி – 12 பேர் உயிரிழப்பு!

Twelve people have been killed in a tanker truck collision with a bus.

பேருந்து மீது டேங்கர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 12 பேர் உயிழந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் மற்றும் ஜோத்பூர் நெடுஞ்சாலையில் இன்று காலை டேங்கர் லாரி ஒன்று பேருந்து மோதி பெரும் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின்போது பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பேருந்தில் இருந்த பயணிகள் 12 பேர் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து கூறியுள்ள பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர், காலை 9:55 மணியளவில் பலோத்ராவிலிருந்து இருந்து பேருந்து புறப்பட்டதாகவும்,  சாலையின் தவறான பக்கத்தில் இருந்து வந்த டேங்கர் லாரி பேருந்து மீது மோதியதால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், டேங்கர் லாரி மோதிய பின் உடனடியாக பேருந்து தீப்பிடித்து எரிந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விபத்தின் போது பேருந்தில் 25-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததாகவும், 12 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.