கேரளா: கேரள மாநிலம் இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். புல்லுப்பாறை அருகே வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது. இன்று காலை 6.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி காயமடைந்தவர்களை மீட்டனர். இதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மாவேலிக்கரையில் இருந்து கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தை […]
உத்தராகண்டம்: இன்று கர்வால் மோட்டார்ஸ் பேருந்து 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு அல்மோராவில் உள்ள மார்ச்சுலா என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, உத்தரகாண்ட் மாநிலத்தின் குபி அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ராம்நகரில் உள்ள பவுரி-அல்மோரா எல்லையில் 200 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட போது பேருந்தில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அத்துடன் ஆம்புலன்ஸ்க்கும் தகவலை தெரிவித்தனர். […]
ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியில் மினி பஸ் ஒன்று எதிர்பாரா விதமாக, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இன்று காலை அதுவுமா இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. சம்பவ இடத்தில் தீயணைப்பு துறை மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கோர விபத்தில் சிக்கி பள்ளி மாணவர்கள் இருவர் உள்பட 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவலில் தெரிய வந்தது. மேலும், விபத்தில் படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் […]
ஜம்மு-காஷ்மீர் : பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சாலையில் இருந்து தவறி, பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர். ஜம்மு மாவட்டத்தில் பக்தர்களை ஏற்றிச் சென்ற சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று நிலை தடுமாறி ஒரு 150 பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் குறைந்தது 15 பேர் பலியாகினர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த விபத்து ஜம்மு-பூஞ்ச் நெடுஞ்சாலை டாங்லி மோர் அருகே சோகி சோராவில் நடந்ததுள்ளது. பேருந்து 150 அடிக்கு கீழே பள்ளத்தாக்கில் உருண்டதாக சொல்லப்படுகிறது. தற்போது, […]
பாகிஸ்தான் : அதிவேகமாக சென்ற பயணிகள் பேருந்து ஒன்று நெடுஞ்சாலையில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் இன்று (புதன்கிழமை) அதிகாலை அதிவேகமாக சென்ற பயணிகள் பேருந்து ஒன்று நெடுஞ்சாலையில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் குறைந்தது 28 பேர் பலியாகினர், 20 பேர் காயமடைந்தனர். பலுசிஸ்தான் மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரமான டர்பத்தில் இருந்து மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவிற்கு பேருந்து சென்று கொண்டிருந்த போது, வாசுக் நகரில் திடீரென பேருந்து […]
Bus Accident: ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளார். உளுந்தூர்பேட்டை அருகே சாலை தடுப்பில் மோதி, ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உள்ளிட்ட 15 பேர் படுகாயம் அடைந்துள்ளார்கள். தற்பொழுது, விபத்தில் காயமடைந்தவர்கள் உளுந்தூர்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்னர். நாகர்கோவிலிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற பேருந்து ஆசனூர் பகுதியில் கவிழ்ந்தது. இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டநிலையில், போலீசார் இது விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாலம் கட்டுமான பணி […]
Bus Accident: ஹரியானா மாநிலம் மகேந்திரகரில் உள்ள உன்ஹானி கிராமம் அருகே மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி ஐந்து மாணவர்கள் உயிரிழந்தனர் மற்றும் 15 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கான சரியான காரணத்தை கண்டறிய போலீசார் தீவிரமாக விசரணையில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்த குழந்தைகள் தற்போது அவசர மருத்துவ சிகிச்சையைப் பெற்று வருகின்றனர்.
சென்னை வடபழனியில் இருந்து ஹைதராபாத்திற்கு சுற்றுலா நோக்கி சென்ற சுற்றுலா பேருந்து ஒன்று இன்று அதிகாலை விபத்தில் சிக்கியது. இதில் பேருந்தில் பயணித்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். 8 மாவட்டங்களில் N.I.A அதிகாரிகள் சோதனை..! ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் ஹைதராபாத் செல்லும் நெடுஞ்சாலையில் சாலை ஓரத்தில் ஒரு லாரி மற்றொரு லாரி மீது மோதி விபத்தில் சிக்கி உள்ளது. அந்த சமயம் அந்த பகுதியில் வந்த லாரி இந்த […]
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் தமிழ்நாடு மாநிலம் அரசுப் பேருந்தும், கேரளா மாநிலம் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அதாவது, தமிழக அரசு பேருந்து ஒன்று களியக்காவிளையிலிருந்து நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருக்கையில், அதேபோல் எதிரே நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள அரசுப் பேருந்தும் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ஒன்றுக்கு ஒன்று எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது. பஞ்சாப் ஆளுநர் […]
15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம், அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இன்றும் 2வது நாளாக இன்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்ததால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். இந்த […]
ஓசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்ததகாவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஓசூர் அருகே நாகமங்கலத்தில் பெங்களூரு நோக்கி சென்ற தனியார் பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், 3 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாசிக் அருகே ஏற்பட்ட விபத்தில் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதியதில் இருவர் இறந்தனர், மற்றும் பலர் காயமடைந்தனர். மகாராஷ்டிரா: நாசிக்-ல் உள்ள சின்னார் நெடுஞ்சாலையில் ஷிண்டே-பால்ஸ் சுங்கச்சாவடி அருகே இரண்டு அரசுப் பேருந்துகளும் மற்ற வாகனங்களுடன் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஒரு பேருந்தானது அங்கிருந்த மற்ற பைக்குகள் மீது மோதியதில் அந்த இடத்திலேயே தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் பேருந்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் முயற்சிகள் மீட்பு படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேருந்து தீப்பிடித்து எரிந்த […]
ஜம்மு காஷ்மீர் பகுதியில் திருமண ஊர்வலம் சென்றுகொண்டிருந்த பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் காயமடைந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ராஜாரி என்ற இடத்தில் திருமண ஊர்வலம் சென்று கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்தது. இதில் பயணித்தவர்களில் குறைந்தது 17 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜோரி மாவட்டத்தின் தர்குண்டி எல்ஓசி சாலையில் நடந்த இந்த விபத்தில் காயமடைந்த 17 பேரும் மீட்கப்பட்டு அங்குள்ள ஜிஎம்சி ரஜோரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் காயமடைந்த 17 பேரில் […]
மத்திய பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்து வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் இந்தோரிலிருந்து புனே நோக்கி சென்ற பேருந்து தார் மாவட்டம் கல்காட் சஞ்சய் என்ற பகுதியில் உள்ள பாலத்திலிருந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 15 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தகவல் தெரிவித்துள்ளார். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் […]
மத்தியப்பிரதேசத்தில் பேருந்து விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் அமைத்துள்ள பெடலில் இன்று பேருந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்தும் லாரியும் ஒன்றோடொன்று மோதியுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 25 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து தெரிவித்த அப்பகுதி காவல்துறை அதிகாரி சுனில் லாடா, பேருந்தும் லாரியும் எதிர் எதிர் திசையில் வந்துள்ளது. அப்போது வளைவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று […]
பிரதமர் மோடி ராஜஸ்தான் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 2 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் மற்றும் ஜோத்பூர் நெடுஞ்சாலையில் இன்று காலை டேங்கர் லாரி ஒன்று பேருந்து மோதி பெரும் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் போது பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பேருந்தில் இருந்த பயணிகள் 12 பேர் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ராஜஸ்தான் பார்மர் மற்றும் ஜோத்பூர் நெடுஞ் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமரின் […]
பேருந்து மீது டேங்கர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 12 பேர் உயிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் மற்றும் ஜோத்பூர் நெடுஞ்சாலையில் இன்று காலை டேங்கர் லாரி ஒன்று பேருந்து மோதி பெரும் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின்போது பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பேருந்தில் இருந்த பயணிகள் 12 பேர் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். இது குறித்து கூறியுள்ள பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர், காலை 9:55 மணியளவில் பலோத்ராவிலிருந்து இருந்து பேருந்து […]
பெரு நாட்டில் சுரங்கத்தொழிலாளர்கள் பேருந்து விபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று பெரு. இந்நாட்டில் உள்ள அப்ருனிமெக் மாகாணத்தில் காப்பர் சுரங்கம் அமைந்துள்ளது. ஹடபம்பாஸ் நகரில் அமைந்துள்ள இந்த சுரங்கத்திலிருந்து வழக்கம்போல் வேலை முடிந்தவுடன் 18 பணியாளர்களை ஏற்றி கொண்டு அந்த நிறுவனத்தின் பேருந்து சென்றுள்ளது. அப்பொழுது மலைப்பாங்கான பகுதி வழியாக பேருந்து சென்றுள்ளது. அச்சமயத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென 200 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் […]
கானாவின் தெற்கு பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றோடொன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கானாவில் அமைந்துள்ள அக்ரா-கேப் கோஸ்ட் நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இங்குள்ள கொமோவா மேம்போங் என்ற இடத்தில் இரண்டு பேருந்துகள் ஒன்றோடொன்று மோதியுள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தால் 20க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள வின்னிபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்து விபத்தில் சிக்கியவர்களை தீயணைப்பு […]
கல்லணையில் இருந்து மன்னார்குடி நோக்கி சென்ற தனியார் பேருந்து, வரகூர் கிராமத்திற்கு வந்தபோது சாலையின் ஓரம் இருந்த மின்கம்பி மீது உரசி விபத்துக்குளானது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையில் இருந்து மன்னார்குடி நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து, திருவையாறு அருகே உள்ள வரகூர் கிராமத்திற்கு வந்தபோது சாலையோரமாக இருந்த மணலில் அமுங்கி, அதற்கு அருகில் இருந்த மின்கம்பி மீது மோதியது. இதனால் பேருந்தில் படியில் இருந்து பயணம் செய்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக […]