ரயில்வேயின் NTPC, Level 1 தேர்வு முடிவு ஒத்திவைப்பு!

Ministry of Railways announces suspension of NTPC & Railway Selection Board Level-1 examinations due to continuous struggle of selectors.

தேர்வர்களின் தொடர் போராட்டம் காரணமாக NTPC & ரயில்வே தேர்வு வாரியத்தின் நிலை-1 தேர்வுகளை நிறுத்தி வைப்பதாக ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு.

தொழில்நுட்பம் இல்லாத பிரிவுகள், லெவல் 1 தேர்வு முடிவுகளை இறுதி வைப்பதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. தேர்வில் முறைகேடு நடந்ததாக பீகாரில் தேர்வர்கள் போராட்டம் நடத்தியதால் ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. முறைகேடு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதனிடையே, ரயில்வே துறையில் தொழில்நுட்பம் சாராத பணிகளுக்கான தேர்வு முடிவுகள் ஜனவரி 15-ம் தேதி வெளியாகின. தேர்வு முடிவுகள் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும் என எதிர்பார்த்திருந்த மாணவர்களுக்கு 2ம் நிலை தேர்வுகள் நடைபெறும் என்ற ரயில்வே வாரியத்தின் அறிவிப்பு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, பிகார் மாநிலம் கயாவில் ரயில்வே தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரயிலுக்கும் தீ வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ”சிபிடி 2 தேர்வு தேதி அறிவிக்கப்படவில்லை. இது குறித்த எந்தவித புதிய தகவலும் இல்லை. முடிவுக்காக காத்திருக்கிறோம். எனவே தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என்று . கயாவில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ரயில்வே தேர்வு வாரியத்தின் NTPC தேர்வில் உள்ள முரண்பாடுகளைக் கண்டித்து பீகாரில் தேர்வுகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேர்வர்களின் தொடர் போராட்டம் காரணமாக NTPC & ரயில்வே தேர்வு வாரியத்தின் நிலை-1 தேர்வுகளை நிறுத்தி வைப்பதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.