நாளை ரயில் மறியல் போராட்டம்- விவசாயிகள் அமைப்பு..!

Default Image

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நாளை ரயில் மறியல் போராட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் 80 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளிடம் மத்திய அரசு  பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், நாளை காலை 12 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என விவசாயிகள் அமைப்பு அறிவித்துள்ளனர். போராட்ட அறிவிப்பு காரணமாக, பஞ்சாப், அரியானா, உ.பி, மேற்கு வங்கத்தில் ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டதாக ரயில்வே சரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விவசாயிகள் கடந்த 6-ம் தேதி 3 மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்