பள்ளி மாணவர்களை கடித்த வெறிநாய் – அடித்து கொன்ற கிராம மக்கள்!

In Uttar Pradesh, villagers have beaten to death a rabid dog that bit school children.

உத்தர பிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்களை கடித்த வெறிநாயை  கிராம மக்கள் அடித்து கொன்றுள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாம்லி மாவட்டத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மாணவர்களை வெறி நாய் ஒன்று துரத்தி துரத்தி கண்டித்துள்ளது. இதில் 4 மாணவர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் காயமடைந்த சாதிக் (4), மகாக் (4), இன்ஷா (10), மற்றும் ஷியாம் (7) ஆகிய நான்கு பேரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அதன் பின் மாணவர்களை கடித்த அந்த வெறி பிடித்த நாயை கைரானா காவல் நிலையத்திற்குட்பட்ட ஜஹான்பூர் கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து அடித்து கொன்றுள்ளனர்.