நாட்டின் பொருளாதாரத்தை பிரதமர் நரேந்திர மோடி சீரழித்து விட்டார்-ராகுல் காந்தி

Prime Minister Narendra Modi has ruined the country's economy - Rahul Gandhi

நாட்டின் பொருளாதாரத்தை மோடி சீரழித்து விட்டார் என்று  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்ற பெயரால் நாட்டின் பொருளாதாரத்தை பிரதமர் நரேந்திர மோடி சீரழித்து விட்டார் .

அதேபோல் மசூத் அசார் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அவரை பாகிஸ்தானுக்கு தப்ப விட்டது யார்? என்று கேள்வி எழுப்பினார். ஆட்சியில் இருந்தது பா.ஜ.க தான் தப்ப விட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.