புதிய கல்வி கொள்கை குறித்து வடிவமைத்து குழுவிற்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி.

Default Image

புதிய கல்வி கொள்கை குறித்து வடிவமைத்து குழுவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

 புதிய கல்வி கொள்கை தொடர்பாக இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான 9 பேர் குழுவை கடந்த 2017-ஆம் ஆண்டு மத்திய அரசு அமைத்தது.இந்தக் குழுவானது அறிக்கையை மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடம், சமர்ப்பித்தது.மத்திய அரசானது அண்மையில் புதிய கல்வி கொள்கை 2020-ஐ அறிமுகப்படுத்தியது.அந்த கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை இடம் பெற்றிருந்தது. அதாவது, தாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்து மூன்றாவது மொழியாக ஏதேனும் ஒரு விருப்ப மொழியை தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என கூறப்பட்டது. மேலும், 3,5,8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைமுறையையும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த பல்வேறு கருத்துக்களால் புதிய கல்வி கொள்கையை தமிழகத்தில் பலரும் எதிர்த்து கருத்து கூறி வருகின்றனர்.

இதனிடையே புதிய கல்விக்கொள்கை மூலம் உயர்கல்வியில் செய்யப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் மோடி  காணொளி காட்சி மூலமாக நேற்று  உரையாற்றினார்.அப்போது புதிய கல்விக் கொள்கையின் சிறப்புகள் பற்றி எடுத்துரைத்தார்.மேலும் புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்த கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவிற்கு  பாராட்டுகளை தெரிவிப்பதாக தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
Ashwin -Sachin -Kapil Dev
Tamilnadu CM MK Stalin
Mayandi who was murdered in Nellai Court
American YouTuber - jaystreazy
basit ali about Ravichandran Ashwin
Haryana Ex OmPrakashChautala