#Breaking:பிரதமர் மோடியின் சகோதரர் சென்ற கார் மைசூர் அருகே விபத்தில் சிக்கியது 4 பேர் காயம்

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர்  கர்நாடக மாநிலம் மைசூரு அருகே காரில்  சென்றுகொண்டிருந்தபொழுது விபத்தில் சிக்கினர்.

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர்  கர்நாடக மாநிலம் மைசூரு அருகே காரில்  சென்றுகொண்டிருந்தபொழுது விபத்தில் சிக்கினர்.

பிரஹலாத் மோடி தனது மகன் மற்றும் மருமகளுடன் பந்திப்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது மதியம் 2 மணியளவில் நஞ்சன்கூடுக்கு அருகில் உள்ள கடகோலா என்ற இடத்தில் அவர்களின் வாகனம் சாலை டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது.

சம்பவத்தை உறுதி செய்த மைசூர் தெற்கு போலீசார், குடும்பத்தினர் சிகிச்சைக்காக ஜேஎஸ்எஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், காயங்கள் சிறியவை என முதற்கட்டமாக தெரிவித்துள்ளனர்.