மைசூரு: போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்டதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி மற்றும் உறவினர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி மற்றும் அவர்களது உறவினர் என மொத்தம் 9 பேர் மீது போலி ஆவணங்கள் தயாரித்ததற்காக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (Mysore Urban Development Authority – MUDA) அரசு நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து பயன்படுத்தியதாக […]
பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் கர்நாடக மாநிலம் மைசூரு அருகே காரில் சென்றுகொண்டிருந்தபொழுது விபத்தில் சிக்கினர். பிரஹலாத் மோடி தனது மகன் மற்றும் மருமகளுடன் பந்திப்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது மதியம் 2 மணியளவில் நஞ்சன்கூடுக்கு அருகில் உள்ள கடகோலா என்ற இடத்தில் அவர்களின் வாகனம் சாலை டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவத்தை உறுதி செய்த மைசூர் தெற்கு போலீசார், குடும்பத்தினர் சிகிச்சைக்காக ஜேஎஸ்எஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், காயங்கள் சிறியவை என […]
மைசூரு பல்கலைக்கழகத்தில் பயின்ற பாடங்களில் அதிக அளவு மதிப்பெண் பெற்று 20 தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார். மைசூரு பல்கலைக்கழகத்தில் தற்போது 101 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் மாணவ, மாணவிகளுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பட்டங்களை வழங்கியுள்ளார். இந்த பல்கலைக்கழகத்தில் படித்த சைத்ரா நாராயண் என்ற மாணவி பல்வேறு பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்று 20 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை அடைந்துள்ளார். கர்நாடகா மாநிலம் உத்தரகண்டா மாவட்டத்தில் உள்ள சிர்சி என்ற பகுதிக்கு […]
கர்நாடகாவின் மைசூரில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது. கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி ஒருவர் படித்து வருகிறார். கடந்த 24ம் தேதி, மைசூரு லலித்ரிபுரா பகுதியில் உள்ள திப்பையனகெரே வனப் பகுதியிலிருந்து தன்னுடன் படிக்கும் மாணவருடன் சாமுண்டி மலைக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், அந்த மாணவரைத் தாக்கிவிட்டு, […]
கர்நாடகாவில் இரண்டு பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா இருப்பதை அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து நாட்டில் 4 மாநிலங்களில் 40 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா ஏற்பட்டுள்ளது. தற்போது கர்நாடகாவில் 2 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை 22 பேருக்கு இந்த டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரம், மத்தியபிரதேசம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் இந்த பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. […]
கர்நாடகாவை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் தனது மகனின் உடல்நலத்திற்காக மருந்து வாங்க 300 கி.மீ. சைக்கிளில் பயணித்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஆனந்த் என்பவர் மைசூருக்கு அருகில் நரசிபூர் தாலுக்காவில் உள்ள கனிகன கோப்பலு என்ற இடத்தில் வசிக்கிறார். இவர் ஒரு கட்டிட வேலை பார்க்கும் கூலி தொழிலாளி. வறுமையில் குடும்பம் நடத்தும் இவரின் மகனுக்கு நரம்பு சம்பத்தப்பட்ட பாதிப்பு உள்ளது. மைசூர் மருத்துவமனைகளில் குணமடையாததால் அவரது மகனை பெங்களூரில் உள்ள தேசிய மனநலம் […]
மைசூரில்,ஏழை முதியவர் ஒருவர் நடத்தி வந்த பொது நூலகம் ஒன்று தீயில் எரிந்து தரைமட்டமான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் மைசூரில் உள்ள உதயகிரி பகுதியில் சையத் இசாக் என்ற 65 வயதுடைய முதியவர் ஒருவர் வசித்து வருகிறார்.கூலி வேலை செய்து அதில் வரும் வருமானத்தைக் கொண்டு பொது நூலகம் ஒன்றை நடத்தி வருகிறார். 2011ம் ஆண்டில் தொடங்கப்பட்ட அந்நூலகத்தில்,திருக்குறள்,குரான்,பொது அறிவு உள்ளிட்ட 11,000 நூல்கள் இருந்தன.கடந்த வெள்ளிக்கிழமையன்று,காலை சையத் நூலகத்திற்கு வந்தபோது நூலகம் […]
நவராத்திரி திருவிழா இன்று முதல் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கர்நாடக மாநிலத்தின் அடையாளமாக திகழும் மைசூரு தசரா விழா வெகுவிமர்சையாக தொடங்கப்பட்டது. விஜயதசமியையொட்டி ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் இவ்விழா கர்நாடக மாநிலத்தின் பண்டிகையாக அரசே ஏற்று நடத்தி வருகிறது. இந்நிலையில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் ஒரு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு அக்குழுவினர் பல அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தது.பல கட்டுப்பாடுகளுடன் நடப்பாண்டு தசரா விழாவை எளிமையாக நடத்த முடிவு எடுக்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகள் தற்போது தயார் […]
மைசூரில் இருந்து காய்கறி ஏற்றுக் கொண்டு வந்த லாரியில் ரூ.51 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும், தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கும், பிற மாநிலங்களிலிருந்து அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் வருகின்றது. இந்நிலையில், மைசூரில் இருந்து காய்கறி ஏற்றுக் கொண்டு வந்த லாரியை தமிழக எல்லையான கக்கனல்லா சோதனைச் சாவடியில் காவலத்துறையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த லாரியில் ரூ.51 லட்சம் பணம் இருந்தது […]
இந்தியாவில் தசரா திருவிழா கர்நாடக மாநிலம் அரண்மனை நகரமான மைசூரில் கோலாகலமாக கொண்டாடப்படும். அதற்கு அடுத்ததாக தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலிலும் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். மைசூர் தசரா திருவிழாவை முன்னிட்டு வருடாவருடம் காற்றாடி திருவிழா நடைபெறும். ஆனால் இந்த வருடம் உலகின் பிரதான நாடுகளிலிருந்தும் காற்றாடி விடும் போட்டியாளர்கள் வரவழைத்து சர்வதேச காற்றாடி திருவிழாவாகக் கொண்டாடப்படவுள்ளது. வருகிற அக்டோபர் மாதம் 12,13 தேதிகளில் மைசூரில் சர்வதேச காற்றாடி திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக […]