Coronil மருந்தை தயாரிக்கும் போது பதஞ்சலி 100% விதிமுறைகளை பின்பற்றியது.!

கொரோனா சிகிசைக்கு தயாரிக்கப்பட்ட Coronil மருந்தை தயாரிக்கும் போது பதஞ்சலி 100% விதிமுறைகளையும், நெறிமுறைகளையும் பின்பற்றியுள்ளது. Coronil மருந்தை தொடர்பான அனைத்து ஆதாரங்களும் ஆயுஷ் அமைச்சகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன என ராம்தேவ் மீண்டும் கூறியுள்ளார்.
நேற்று நாங்கள் ஆயுஷ் அமைச்சகத்திடமிருந்து ஒரு கேள்வித்தாளைப் பெற்றோம். ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஜி மற்றும் ஆச்சார்யா வர்ஷ்னி ஜி ஆகியோர் அரை மணி நேரத்தில் பதில்களை அனுப்பினார்கள். சி.டி.ஆர்.ஐ பற்றியும் சொல்ல விரும்புகிறேன். சி.டி.ஆர்.ஐ இந்திய அரசின் அமைப்பான ஐ.சி.எம்.ஆரின் கீழ் வருகிறது.
நாங்கள் தயாரித்து இருக்கும் Coronil மருந்து கொரோனா வைரஸ் நோயை 70 சதவிகிதம் குணப்படுத்த முடியும். ஏழு நாட்களில் கொரோனா தொற்றில் இருந்து குணப்படுத்தும் என சுவாமி ராம்தேவ் தெரிவித்தார்.
பதஞ்சலியின், கொரோனா வைரஸ் நோய்க்காக தயாரிக்கப்பட்ட Coronil மருந்தை ரூ .545 க்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தில், அஸ்வகந்தா, கிலோய், துளசி ஆகியவற்றின் கலவையாகும். ஆயுர்வேத மருந்துகள் எந்த பக்க விளைவுகளையும் காட்டுவதில்லை என ராம்தேவ் கூறினார்.