இன்று நிதிஷ் குமார் முதலமைச்சர் பதவியேற்கிறார்..!

Default Image

பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்று வெற்றிபெற்ற நிலையில் , நிதிஷ் குமார் இன்று  முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

243 தொகுதிகளை கொண்ட பீகாரில் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. இங்கு ஆட்சி அமைக்க 122 உறுப்பினர்கள் தேவை. 3 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில்  பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.க. 74 இடங்களையும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களையும், வி.ஐ.பி. மற்றும் எச்.ஏ.எம்.எஸ். கட்சிகள் தலா 4 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இதைத்தொடர்ந்து, பாட்னாவில்  தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பீகார் முதல்வராக மீண்டும் நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார்.நிதிஷ்குமார் பீகார் முதல்வராக நிதிஷ்குமார் 7-வது முறையாகவும், ஏற்கனவே 3 முறை தொடர்ந்து முதல்வராக பதவி வகித்த நிலையில் தற்போது நான்காவது முறையாகவும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் இதனால்  நேற்று நிதிஷ் குமார் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.இந்நிலையில் இன்று  நிதிஷ் குமார் முதலமைச்சர் பதவியேற்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்