மத்திய பட்ஜெட் 2024 : இன்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை கிண்டல் செய்யும் விதமாக நடிகர் பிரகாஷ் ராஜ்,தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். பாஜக, கடந்த 2014, 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலை போல பெரும்பான்மை அல்லாமல் இந்த முறை கூட்டணி (NDA) அமைத்து ஆட்சி செய்து வருகிறது. இந்த NDA கூட்டணியில் பிரதான கூட்டணி காட்சிகளான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்க்கு தேசம் (ஆந்திரா), நிதிஷ்குமரின் ஐக்கிய ஜனதா தளம் (பீகார்) கட்சிகள் இடம்பெற்றுள்ளன. […]
பீகார்: சரண் மாவட்டத்தில் கண்டகி ஆற்றின் குறுக்கே பயன்பாட்டில் இருந்த ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. பீகார் மாநிலத்தில் சமீப நாட்களாக பாலங்கள் இடிந்து விழுவது தொடர்கதையாகி வருகிறது. இதுவரை கடந்த 15 நாட்களில் 10 பாலங்கள் இடிந்து விழுந்ததாக வெளியாகும் செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டாலும், மாநிலத்தில் உள்ள கட்டடங்களின் தரம் மீதான கேள்விகள் வலுவாக எழுப்பப்படுகிறது. ஏற்கனவே, நேற்று சரண் மாவட்டத்தில் 150 ஆண்டுகள் பழைமையான ஒரு பாலம் இடிந்து விழுந்த நிலையில், தற்போது […]
பீகார் : பீகாரில் இட ஒதுக்கீடு வரம்பை 50%-ல் இருந்து 65% ஆக அதிகரிப்பதற்கான திருத்தச் சட்டத்தை பாட்னா உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பீகார் மாநிலத்தில் தற்பொழுது ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு ஜாதி வாரி கணக்கீடுப்பை நடத்தி முடித்தது. அதன் விபரங்களை அம்மாநில அரசால் கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, பீகாரில் உள்ள 13.07 […]
பீகார்: இந்தியாவை கல்வி உலகின் மையமாக மாற்றுவதே எனது நோக்கம் என நாளந்தா பல்கலைக்கழக திறப்பு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாளந்தா பல்கலைகழகத்தின் புதிய கட்டடத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். பீகார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெற்று வரும் இந்த திறப்பு விழாவில் பிரதமர் மோடி, மாநில முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் பன்னாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் […]
பீகார்: 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சர்வதேச நாடுகளின் பங்களிப்பை கொண்டுள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பீகாரில் 5ஆம் நூற்றாண்டில் சர்வதேச நாட்டு அறிஞர்களின் பங்களிப்புகளோடு உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் நாளந்தா பல்கலைகழகம். சுமார் 800 ஆண்டுகள் பன்னாட்டு அறிஞர்களின் நூல்கள், ஆய்வுகளோடு சிறப்பாக செயல்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம் 12ஆம் நூற்றாண்டு அயல்நாட்டினர் படையெடுப்போடு அழிக்கப்பட்டது. 1600 ஆண்டுகள் பழமையான இந்த நாளந்தா பல்கலைக்கழகம் தற்போது புதியதாக கட்டப்பட்டு இன்று […]
பிரதமர் மோடி : பிரதமர் நிதிஷ்குமார் பிரதமர் மோடி காலில் விழுந்தது பிகாருக்கு அவமானம் என பிரசாந்த் கிஷோர் ஆவேசமாக பேசியுள்ளார். பிகாரின் நவாதா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் மோடி கால்களில் பிகார் முதல்வர் நிதிஷ் குமார் விழுந்து வணங்கினார். இந்த சம்பவம் அப்போது அரசியல் வட்டாரத்தில் பேசும்பொருளானது. இந்த சம்பவம் நடந்து 3 மாதங்கள் கடந்த நிலையில், இந்திய அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இது பற்றி […]
டெல்லி: உள்துறை, நிதித்துறை, பாதுகாப்புத்துறை போன்ற முக்கிய துறைகளை தன்வசம் வைத்துக்கொள்ள பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் முடிந்து பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. பிரதமர் மோடி நாளை மாலை 7 மணி அளவில் இந்தியவின் பிரதமராக 3வது முறையாக பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், நாளை முக்கிய துறைகளுக்கான அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். இப்படியான சூழலில், NDA கூட்டணியில் முக்கிய கட்சிகளாக இருக்கும் […]
டெல்லி: நிதிஷ் குமாருக்கு பிரதமர் பதவி வழங்குவதாக எதிர்க்கட்சிகள் கூறியதாக JDU செய்தி தொடர்பாளர் கே.சி.தியாகி கூறியுள்ளார். மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி அதன் பரபரப்புகள் இன்னும் நீண்டு கொண்டு இருக்கிறது. இரண்டு முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த பாஜக இந்த முறை கூட்டணிகளை ஒன்றிணைந்து NDA கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளது. இந்த கூட்டணியில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும், சந்திரபாபு நாயுடுவின் JDU கட்சியும் மிக முக்கிய பங்காற்றுகின்றன. தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில் […]
டெல்லி: மக்களவை தேர்தல் வெற்றிக்கு பின்னர் அதிக இடங்களை கைப்பற்றிய பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியமைக்க அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கியநிலையாக, இன்று டெல்லியில் NDA கூட்டணி எம்பிக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பாஜக, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடியின் பெயரை நாடாளுமன்ற குழுத்தலைவர் (பிரதமர்) என்று ராஜ்நாத் சிங் முன்மொழிந்தார். இதனை […]
டெல்லி: மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக (NDA) கூட்டணி அதிக இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் பாஜக தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டு கூட்டணியை உறுதிப்படுத்தினார். இதனை அடுத்து, இன்று NDA கூட்டணியில் உள்ள எம்.பிக்கள், தெலுங்கு தேசம் கட்சி தலைவர்சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ்குமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டம், இன்று டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற […]
டெல்லி: 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தல் போல அல்லாமல், இந்த முறை பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க போதிய இடங்கள் இல்லாத காரணத்தால் கூட்டணியை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் தனிப்பெரும்பான்மை ஆட்சி என்பதால் மற்ற கட்சிகளின் கருத்துக்களை கலந்தாலோசிக்காமல் ஆளும் பாஜக தங்கள் செயல்திட்டங்களை செயல்படுத்தி வந்தது. ஆனால் இனி கூட்டணி கட்சிகளிடம் ஆலோசிக்க வேண்டிய கட்டயத்தில் உள்ளது. இதனால் பாஜகவால் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த ஒரே நாடு ஒரே தேர்தல், சிஏஏ சட்டம் […]
டெல்லி: மக்களவை தேர்தலுக்கு பின்னர் அதிகளவு பரபரப்பாக இயங்கி வரும் இடமாக டெல்லி தற்போது மாறி வருகிறது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தற்போது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் (NDA), காங்கிரஸ் உள்ளடக்கிய இந்தியா (I.N.D.I.A) கூட்டணியும் இன்று டெல்லியில் வெவ்வேறு இடங்களில் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், சரத் பவார், அபிஷேக் பானர்ஜி ஆகியோர் கார்கே இல்லத்திற்கு வந்துள்ளனர். […]
டெல்லி: மக்களவை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தற்போது மாநில கட்சிகளிடம் தேசிய கட்சிகள் ஆதரவு கேட்கும் சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக நிதிஷ் குமார் (JDU), சந்திரபாபு நாயுடு (TDP) ஆகியோரின் ஆதரவை NDA மற்றும் I.N.D.I.A கூட்டணிகள் பெற முயற்சித்து வருகின்றன. இதற்கான மறைமுக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருகின்றன. இந்த சூழல் தான் இன்று RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் (I.N.D.I.A கூட்டணி) மற்றும் JDU தலைவர் நிதிஷ்குமார் (NDA கூட்டணி) ஆகியோர் ஒன்றாக […]
மக்களவை தேர்தல் : நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை இல்லாததால், பாஜக 3வது முறையாக ஆட்சியமைக்க சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோரின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த சூழலில், மற்ற கட்சிகளை ஒன்றிணைக்க NDA மற்றும் I.N.D.I.A கூட்டணி கட்சியினர் முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில், டெல்லியில் இன்று மாலை நடக்கும் பாஜக கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஜேடியு தலைவர் நிதிஷ் குமார் டெல்லிக்கு விமானத்தில் பயணித்தார். அதே விமானத்தில் இந்தியா கூட்டணி கூட்டத்துக்கு […]
NDA கூட்டணி: நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. பாஜக 240 தொகுதிகளையும், காங்கிரஸ் 99 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. இதில் பாஜகவுக்கு கடந்த தேர்தல்கள் போல பெரும்பான்மை வெற்றி கிடைக்கவில்லை. அதனால், பாஜக தலைமையின் கீழ் உள்ள NDA கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் சூழல் உருவாகியுள்ளது. முக்கியமாக, 16 இடங்களை வென்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி மற்றும் 12 இடங்களை பெற்றுள்ள ஐக்கிய […]
காங்கிரஸ்: மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் சூழலில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தேர்தல் முடிவுகள் குறித்தும், காங்கிரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு தகவல்களை குறிப்பிட்டனர். அப்போது, இந்தியா கூட்டணியில் முன்னர் அங்கம் வகித்த கட்சிகளோடு (ஐக்கிய ஜனதா தளம் – நிதிஷ் குமார்) கூட்டணி வைத்து ஆட்சியை பிடிக்க முயல்வீர்களா.? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு ராகுல் காந்தி பதில் […]
Bihar : பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் JDU கட்சி பிரமுகர் சவுரப் குமார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இளம் பிரமுகர் சவுரப் குமார் என்பவர் நேற்று இரவு பாட்னா பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டார். நேற்று பர்சா பஜார் கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் சவுரப் கலந்துகொண்டுள்ளார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் சவுரபை சரமாரியாக சுட்டனர். இதில் சவுரபின் தலை மற்றும் கழுத்து […]
பீகார் மாநிலத்தில் கடந்த 2020-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக- நிதிஷ் குமார் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதன்பின் முதல்வராக இருந்த நிதிஷ்குமார் திடீரென பாஜக உடன் கூட்டணியை முறித்துக் கொண்டு ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் சேர்ந்து ஆட்சி அமைத்தார். பின்னர் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த மாதம் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தள […]
இந்தியா கூட்டணியில் இருந்த பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார், அதிருப்தி காரணமாக கடந்த ஜனவரி மாதம் அங்கிருந்து விலகி மீண்டும் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் ஐக்கியமானார். இதன்பின், பாஜக ஆதரவுடன் கடந்த ஜனவரி 28-ம் தேதி பீகாரில் 9-வது முறையாக நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்றார். பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாக உள்ளனர். இந்த நிலையில், நிதிஷ்குமார் அரசு மீது இன்று பீகார் சட்டசபையில் நம்பிக்கை […]
பீகார் மாநிலத்தில் கடந்த 2020-ல் சட்டசபை தேர்தலில் பாஜக- நிதிஷ்குமார் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராக இருந்த நிதிஷ்குமார் திடீரென பாஜக உடன் கூட்டணியை முறித்துக் கொண்டு ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் சேர்ந்து ஆட்சி அமைத்தார். பின்னர் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. கடந்த ஜனவரி மாதம் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் பாஜக கூட்டணியில் இணைந்தார். இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி […]