இரவு நேர ஊரடங்கு ரத்து – முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு!

Karnataka Chief Minister announces cancellation of night curfew

கர்நாடக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் அறிவிப்பு.

ஜனவரி 31-ம் தேதி முதல் கர்நாடக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.  கொரோனா கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இரவுநேர ஊரடங்கை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி, ஜனவரி 31-ஆம் தேதி முதல் கர்நாடக மாநிலத்தில் இரவுநேர ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. மேலும், கர்நாடகாவில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடப்படுகிறது.