சென்னை அப்போலோ மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்றுவந்த எச். வசந்தகுமார் காலமானார். இவரின் மரணத்திற்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், கொரோனா காரணமாக கன்னியாகுமரி எம்.பி., ஸ்ரீ எச் வசந்தகுமாரின் மரணம் பற்றிய செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களுக்கு சேவை செய்வதற்கான காங்கிரஸ் சித்தாந்தத்திற்கான அவரது அர்ப்பணிப்பு நம் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும். அவரது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது இரங்கல் என பதிவிட்டுள்ளார்.
unknown node