16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சோஷியல் மீடியா பார்க்க தடை… கர்நாடகத்தில் புதிய ரூல்ஸ்!

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக ஊடகங்களை பார்க்க தடை என முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

Featured image

கர்நாடகா :முதலமைச்சர் சித்தராமையா 2026-27 நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இது அவரது 17-ஆவது பட்ஜெட் ஆகும். மொத்த செலவு ரூ.4,48,004 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.முதலமைச்சர் சித்தராமையா தனது உரையில் ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்தார்.

“ஒன்றிய அரசு அரசியல் சாசனத்தில் கூறப்பட்ட கூட்டாட்சி முறையை பின்பற்றாமல் கர்நாடகாவுக்கு அநீதி இழைத்து வருகிறது” என்று அவர் குற்றம்சாட்டினார். மாநிலத்தின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஒன்றிய அரசு உணர்வுபூர்வமாக நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.மிக முக்கிய அறிவிப்பாக, 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும் என்று சித்தராமையா அறிவித்தார். அதிகரித்து வரும் மொபைல் பயன்பாட்டால் குழந்தைகளின் மனநலம் மற்றும் கல்வி பாதிக்கப்படுவதை தடுப்பதே இதன் நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.

போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தவும் கடுமையான விதிகள் கொண்டு வரப்படும் என்று கூறினார்.பட்ஜெட்டில் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் IISc-உடன் இணைந்து ரோபாட்டிக்ஸ் மற்றும் AI கேம்பஸ் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ISRO மற்றும் Keonics-உடன் இணைந்து Bangalore Robotics and AI Innovation Zone உருவாக்கப்படும். பயோ இன்ஃபர்மேடிக்ஸ் மற்றும் NASSCOM உடன் இணைந்து இரண்டு சிறப்பு மையங்கள் ரூ.16 கோடி செலவில் அமைக்கப்படும்.

பிற முக்கிய அறிவிப்புகளில், பெங்களூரு நகர வெள்ளத்தைத் தடுக்க World Bank-ஆதரவுடன் Karnataka Water Security and Resilience Programme ரூ.5,000 கோடி மதிப்பீட்டில் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும். Bannerghatta Biological Park-இல் ரூ.5 கோடியில் சிறுத்தை மறுவாழ்வு மையம் அமைக்கப்படும். மது விற்பனைத் துறையில் குழு-C அதிகாரிகள் இடமாற்றத்திற்கு டிஜிட்டல் கவுன்சிலிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக, இந்த பட்ஜெட் கர்நாடகாவின் தொழில்நுட்ப தலைமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குழந்தைகள் நலன் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டை மையமாகக் கொண்டுள்ளது. முதலமைச்சர் சித்தராமையா ஒன்றிய அரசின் GST விகித மாற்றம் காரணமாக மாநிலத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது ரூ.10,000 கோடி முதல் ரூ.15,000 கோடி வரை பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டார். இந்த பட்ஜெட் கர்நாடகாவின் நீண்டகால வளர்ச்சி மற்றும் சமூக நலனை இலக்காகக் கொண்டுள்ளது.