ஒடிஷாவில் ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு தேதி அறிவிப்பு

ஒடிஷாவில் ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு மே 20ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் என்று  தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஒடிஷாவில் ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு மே 20ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் என்று  தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஃபானி புயல் ஒடிசாவில் பூரி பகுதியில்  கரையை கடந்தது.ஆனால் புயல் நிவாரணப்பணிகள் நடைபெறுவதால் நீட்தேர்வை ஒத்திவைக்குமாறு ஒடிஷா அரசு தேசிய தேர்வுகள் முகமைக்கு வேண்டுகோள் விடுத்தது.

இதனால்  ஒடிஷா அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அதில்,ஃபானி புயல் பாதிப்பு காரணமாக ஒடிஷாவில் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் ஃபானி புயல் காரணமாக ஒடிஷாவில் ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு மே 20ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் என்று  தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.