மருமகளை காணவில்லை! நாக்கை பிளேடால் வெட்டிக் கொண்ட மாமியார்!
நாக்கை பிளேடால் வெட்டிக் கொண்ட மாமியார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் லட்சுமி நிரலா. இவர் அந்த பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி, இவரது மருமகளான ஜோதி மற்றும் அவரது குழந்தை இருவரும் காணாமல் போயுள்ளனர். இதனையடுத்து நிரலாவின் கணவரான நந்துவும் அவரது மகனும் அவர்கள் இருவரையும் வெள்ளிக்கிழமை முழுவதும் தேடி அழைத்துள்ளனர்.
ஆனால் அவர் கிடைக்கவில்லை இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, மருமகள் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இருந்த லட்சுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை கடவுளிடம் தனது மகள் வீடு திரும்ப வேண்டும் என்று வேண்டிக்கொண்டு பிளேடால் தனது நாக்கை வெட்டியுள்ளார்.
நாக்கை வெட்டி கொன்ற நிரலா ஆரம்பத்தில் மருத்துவமனை செல்ல
மறுத்துள்ளார். அதன்பின் அவரது உறவினர்கள் அவரை சமாதானப்படுத்திய நிலையில், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதுகுறித்து அவரது கணவரான நந்து கூறும் போது ‘யாரோ ஒருவர் லட்சுமியிடம் கடவுளுக்கு நாக்கை காணிக்கையாக்கினால், ஜோதி வீடு திரும்பி விடுவார் என்று கூறியுள்ளார். இது முதல் முறை அல்ல இது போன்ற நடவடிக்கைகளில் அவர் பல முறை ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘நிரலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குணமடைந்து வருவதாகவும், ஆனால் அவரால் இனி பேச இயலாது’என்றும் தெரிவித்துள்ளனர்.