இன்று ஒளிபரப்பாகிறது பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட மேன் vs வைல்ட் நிகழ்ச்சி.
டிஸ்கவரி சேனலில் ஓளிபரப்பாகும் புகழ் பெற்ற நிகழ்ச்சி தான் மேன் vs வைல்ட். இந்த மேன் vs வைல்ட் தொகுத்து வழங்குவதன் மூலம் உலகம் முழுவதும் புகழ் பெற்றவர் பியர் கிரில்ஸ். இவர் காடு ,வன உயிரினங்கள் மற்றும் வன விலங்குகளின் தன்மையை விளக்கி வருகிறார்.
unknown nodeமேலும் பியர் கிரில்ஸ் காட்டுக்குள் நாம் சிக்கி கொண்டால் காட்டில் எப்படி உயிர் பிழைப்பது என்று நிகழ்ச்சி மூலம் விளக்கி வருகிறார்.இந்நிலையில் இந்த மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி , பியர் கிரில்ஸ் உடன் கலந்து கொண்டு காட்டுக்குள் பயணம் செய்து உள்ளார்.இந்த நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் இன்று இரவு 9 மணிக்கு ஓளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.