படுக்கைக்கு வர மறுத்த மனைவியை கொன்று, 3 குழந்தைகளை கால்வாயில் வீசிய நபர் கைது!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நபர் ஒருவர் தனது மனைவி உடலுறவு கொள்ள வர மறுத்ததால் மனைவியை சுட்டு கொன்று விட்டு, அவரது மூன்று குழந்தைகளையும் கால்வாயில் தூக்கி எறிந்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பாசண்டி கிராமத்தில் வசித்து வரக்கூடிய பப்பு குமார் என்பவரது மனைவி தான் டோலி. இவர்களுக்கு ஐந்து வயதில் சோனியா எனும் குழந்தையும், மூன்று வயதில் வான்ஸ் எனும் குழந்தையும், ஒன்றரை வயதில் ஹர்ஷிதா எனும் குழந்தையும் உள்ளனர். கடந்த 15 நாட்களாக குமாரின் மனைவி உடல்ரீதியாக உறவு கொள்வதற்கு பப்பு குமாரிடம் இணங்கி செல்லாமல் இருந்துள்ளார். இதனையடுத்து கோபம் அடைந்த குமார் தனது மனைவியை சுட்டுக் கொன்றுள்ளார்.
மேலும், தனது மூன்று குழந்தைகளையும் தூக்கி கால்வாயில் வீசி எறிந்து உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் வாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குமாரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் விசாரித்ததில் தனது மனைவியை கொன்றதையும் தனது குழந்தைகளை கால்வாயில் வீசியதையும் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் கால்வாயில் இருந்து இதுவரை எந்த ஒரு சடலங்களும் மீட்கப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025
12ஆம் வகுப்பு தேர்வு : பறக்கும் படை, மாற்றுத்திறனாளிகளுக்கான ஏற்பாடுகள்.., பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!
March 3, 2025
2025 ஆஸ்கார் விருதுகள்! 5 விருதுகளை தட்டி தூக்கிய அனோரா!
March 3, 2025