மகாராஷ்டிரா : 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் மீது வழக்குப்பதிவு....!

A case has been registered against a youth from Maharashtra who raped a 5-year-old girl.

5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த  வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள ராம் நகர் எனும் பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞர் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட இருபது வயது இளைஞன் மீது கடந்த நவம்பர் 14 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இவர் மீது போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் தலைமறைவாகி உள்ளதாகவும், அவரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் காவல்துறை ஆணையர் யோகேஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சாக்லேட் தருவதாக கூறி அழைத்துச் சென்று வீட்டிற்குள் வைத்து பலாத்காரம் செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.