மத்திய பிரதேசத்தின் மூத்த பாஜக எம்.எல்.ஏ ஜூகல் கிஷோர் மாரடைப்பால் உயிரிழப்பு!

Jugal Kishore, a senior BJP MLA from Satna district in Madhya Pradesh, died of a heart attack yesterday.

மத்திய பிரதேசத்தில் உள்ள சத்னா மாவட்டத்தின் மூத்த பாஜக எம்.எல்.ஏ ஜூகல் கிஷோர் அவர்கள் நேற்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்த கொரோனாவுக்கு அமைச்சர்கள், அரசியல்வாதிகள் பிரபலங்கள், நடிகர்கள் என யாரும் தப்பிவிடவில்லை என்றுதான் கூறியாக வேண்டும். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தின் சத்னா மாவட்டத்திலுள்ள மூத்த பாஜக எம்எல்ஏ தான் ஜூகல் கிஷோர். 78 வயதாகும் இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் நான்கு மகள்கள் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பதாக  கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜூகல் கொரோனா தொற்றில் இருந்து மீண்டார்.

இருப்பினும் தொடர் சிகிச்சையில் இருந்த ஜூகல் அவர்கள் திங்கள்கிழமை தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது இறுதி சடங்கு இன்று சத்னா மாவட்டத்தில் உள்ள அவரது மூதாதையரின் கிராமமான வசுதாவில் செய்யப்படும் என அவர்களது குடும்பத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு மத்திய பிரதேசத்தின் முதல் மந்திரி சிவராஜ் சவுகான், காங்கிரஸ் தலைவர் கமல்நாத் மற்றும் சட்டமன்ற சபாநாயகர் கிருஷ் கவுதம் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.