மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் தான் கொரோனா அதிகளவில் பாதிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், மூன்று மாதங்களுக்கு பின், இன்று கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்துள்ளது.
அதன்படி, இன்று ஒரே நாளில் அங்கு 717 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,10,846 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் அங்கு ஒரே நாளில் 2,467 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 84,441 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பை பொருத்தளவில், இன்று 55 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,184 ஆக உயர்ந்துள்ளது.
மும்பையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 20,251 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைககம் தெரிவித்துள்ளது.
unknown node