சத்தீஸ்கர் மாநில பாஜக தலைவர் சாகர் சாஹு சுட்டுக் கொலை.
சத்தீஸ்கர் மாநில பாஜக தலைவர் சாகர் சாஹு அவரது வீட்டில் நக்சலைட்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ளூர் பாஜக தலைவர் சாகர் சாஹு, சோடெடோங்கர் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அவர் வீட்டில் இருப்பதை அறிந்து அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சாஹுவின் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
unknown node[Image Source : jagran]
அவர்கள் தங்கள் கையில் வைத்திருந்த ஏகே 47 (AK 47) ரக துப்பாக்கியால் சாஹுவை அவரது குடும்பத்தினர் முன்னிலையில் சுட்டுள்ளனர். இதனால் அவர் காயமடைந்தார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். காயமடைந்த சாஹு நாராயண்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
unknown node[Image Source : Twitter/@ANI]
மருத்துவமனையில் சாகர் சாஹு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் கூறுகையில், “இந்தச் சம்பவம் நக்சலைட்டுகளின் கைவேலையாகத் தெரிகிறது என்றும் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது” எனவும் தெரிவித்தனர்.