நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்க பிரதமர் உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்தார். அதில், துக்கத்தின் இந்த நேரத்தில், என் எண்ணங்கள் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலச்சரிவில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 12 பேர் மீட்கப்பட்டு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
unknown node