கேரளாவில் வெளிமாநில தொழிலாளர்கள் திடீரென போராட்டம் ! போலீஸார் தடியடி மூலம் துரத்தல் !

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல போக்குவரத்து வாகனம் இன்றி தவித்து

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல போக்குவரத்து வாகனம் இன்றி தவித்து வருகின்றனர்.

கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் காலை 7 மணி அளவில் வெளிமாநில தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டு தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். போராட்ட இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் போராட்டத்தை கலைக்க கூறியும் கலைக்காததால் தடியடி ஆரம்பித்தனர்.