இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல போக்குவரத்து வாகனம் இன்றி தவித்து வருகின்றனர். கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் காலை 7 மணி அளவில் வெளிமாநில தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டு தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். போராட்ட இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் போராட்டத்தை கலைக்க கூறியும் கலைக்காததால் தடியடி ஆரம்பித்தனர்.
கேரளாவில் ஊரடங்கு முடிந்து திறக்கப்பட்ட நகைக்கடையில் 19 முட்டையுடன் இருந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்தனர். கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவின்படி அனைத்து வகையான கடைகளும் பூட்டப்பட்டன. இந்நிலையில், கேரளா மாநிலம் கண்ணூரில் உள்ள பையனூரில் ஊரடங்கில் பூட்டியிருந்த நகைக்கடையை தூய்மை பணிக்காக திறந்த போது 19 முட்டைகளுடன் மலைப்பாம்பு ஒன்று இருப்பது கண்டறிந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தடைந்த வனத்துறையினர் பக்குவமாக பாம்பை பிடித்தனர். இந்த மலைப்பாம்பு 3 மீட்டர் நீலமும் […]
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு (144தடை) அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற அனைவரும் வீட்டை விட்ட வெளியே வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல ஸ்விக்கி, சோமாடோ உள்ளிட்ட ஆன்லைன் உணவு விநியோகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களான ரேஷன் பொருட்களை சோமாடோ நிறுவன ஊழியர்கள் […]