தண்ணீர் வடியும் குழாயில் பணத்தை ஒளித்து வைத்த பொறியாளர் – வைரல் வீடியோ உள்ளே ...!

25 lakh cash has been confiscated from the house of an engineer who hid money in a water pipe in Karnataka.

கர்நாடகாவில் தண்ணீர் வடியும் குழாயில் பணத்தை ஒளித்து வைத்த பொறியாளரின் வீட்டிலிருந்து 25 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பொது பணித்துறை பொறியாளராக பணியாற்றி வருபவர் தான் சாந்தா கவுடா. இவரது வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த பல லட்சக்கணக்கான ரூபாயை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் சாந்தா கவுடா ஊழல் தடுப்பு படையினர் சோதனையில் இருந்து தப்பிக்க தண்ணீர் வழியும் பைப்புகளில் கட்டுக்கட்டாக பணத்தை ஒளித்து வைத்தது சோதனையில் தெரியவந்துள்ளது. இவரது வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 25 லட்சம் ரொக்கம் உட்பட, தங்கமும் கிலோ கணக்கில் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதோ அது தொடர்பான வீடியோ,

unknown node