JEE Main 2021 – மூன்றாம் சீசன் முதன்மை தோ்வு முடிவுகள் வெளியீடு!! 17 மாணவர்கள் 100 சதவிகிதம் மதிப்பெண்!!

The results of the third season of JEE Main 2021 have been released and students can visit the official website to know the results.

JEE Main 2021 3ம் சீசன் முதன்மை தோ்வு முடிவுகள் வெளியாகியுள்ளது, மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணைதளம் சென்று முடிவு அறியலாம்.

ஐஐடி, எம்ஐடி உள்ளிட்ட உயா்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சோ்வதற்கான மூன்றாம் கட்ட (3rd session) ஜேஇஇ முதன்மைத் தோ்வு, கடந்த ஜூலை 20-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடைபெற்றது. 12 வெளிநாட்டு நகரங்கள் உள்பட மொத்தம் 334 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 915 மையங்களில் இந்தத் தோ்வு நடத்தப்பட்ட நிலையில், மொத்தம் 7.09 லட்சம் போ் விண்ணப்பித்திருந்தனா்.

ஜேஇஇ முதன்மைத் தோ்வு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் தோ்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில், JEE Main 2021 மூன்றாம் சீசன் முதன்மை தேர்வுக்கான முடிவை தேசிய தோ்வுகள் முகமை (National Testing Agency) வெளியிட்டுள்ளது. இதனைjeemain.nta.nic.inஎன்ற இணையதளம் மூலம் மாணவர்கள் தங்களது முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.

Ntaresults.nic.inஇல் பிறந்த தேதி மற்றும் விண்ணப்ப எண்ணைப் பதிவு செய்து மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களைச் அறியலாம். ஜேஇஇ முதன்மைத் தோ்வு 3வது சீசனில் 17 மாணவர்கள் 100 Percentile மதிப்பெண்கள் எடுத்துள்ளனா். JEE மெயின் 2021 அமர்வு மூன்று முடிவுகளில் திருப்தி அடையாதவர்கள் தங்கள் முடிவுகளை மேம்படுத்த நான்காவது அமர்வில் எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு முதல் ஜேஇஇ முதன்மைத் தோ்வு மாணவா்களின் வசதிக்காக 4 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் இரண்டு கட்டத் தோ்வுகள், கடந்த பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் நடத்தப்பட்டது. 4-ஆம் கட்ட நுழைவுத் தோ்வு ஆகஸ்ட் 26-ஆம் தேதி தொடங்கி செப்டம்பா் 2-ஆம் தேதி வரை நடைபெறும்.