இன்று நாடு முழுவதும் ஜேஇஇ தேர்வு துவங்குகிறது.!

Default Image

இன்று நாடு முழுவதும் 660 மையங்களில்ஜேஇஇ தேர்வு நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என பல தரப்பினர் மற்றும் அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர். மேலும், மாணவர்கள் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால், மத்திய அரசு தேர்வுகள் குறிப்பிட்ட நாள்களில் கண்டிப்பாக நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்நிலையில், ஜேஇஇ முதல்நிலை தேர்வு இன்று முதல் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இத்தேர்வை நாடு முழுவதும் 660 மையங்களில் 9,53,473 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இதில், தமிழகத்தில் 34 மையங்களில் 53,765 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். கொரோனா காரணமாக தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, தேர்வு எழுதும் மாணவர்கள் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்படுகிறது. சமூக இடைவெளியுடன் மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்