JEE மெயின் நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தேசிய தேர்வு முகாமை அறிவித்துள்ளது.
கொரோனாவின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டும், மாணவர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து JEE மெயின் நுழைவுத் தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகாமை அறிவித்துள்ளது.
மே 24 முதல் 28 வரை நடைபெறுவதாக இருந்த JEE மெயின் நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. ஏற்கனவே ஏப்ரல் 27 முதல் 30 வரை நடைபெறுவதாக இருந்த JEE மெயின் நுழைவுத் தேர்வுகள் மே மாதம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், JEE மெயின் தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
JEE தேர்வுக்கான புதிய அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகாமை அறிவித்துள்ளது.
unknown node