ஜம்மு காஷ்மீர் என்கவுண்டர் : முக்கியமான 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை!

Two key militants have been shot dead in a security operation in Jammu and Kashmir.

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு போலீசார் நடத்தில் துப்பாக்கி சூட்டில் முக்கியமான 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு போலீசார் நடத்திய என்கவுண்டரில் லக்ஷர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய இரண்டு முக்கியமான தீவிரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 2 தீவிரவாதிகளும் லக்ஷர் இ தொய்பா இயக்கத்தின் நிழல் அமைப்பான டி.ஆர்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அலூச்சி பாக் எனும் இடத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் ஏற்கனவே பல்வேறு கொலை சம்பவங்கள் மற்றும் இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்தல் உள்ளிட்ட விவகாரங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவர்கள் எனவும், கொலை செய்யப்பட்ட இருவரிடமும் இருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.