மும்பை அல்காஸ் நகர் காவல் நிலையத்தில் துப்பாக்கிசூடு நடத்திய பாஜக எம்எல்ஏ உட்பட மூன்று கைது செய்யப்பட்ட நிலையில், துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு மகாராஷ்டிரா துணை முதல்வரும், உள்துறை அமைச்சருமான தேவேந்திர ஃபடனாவிஸ் உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உல்லாஸ்நகர் காவல் நிலையத்திற்கு பாஜக எம்எல்ஏ கனபத் கெயிக்வாட் மற்றும் சிவசேனா ஷிண்டே பிரிவு முன்னாள் கவுன்சிலர் மகேஷ் கெய்க்வாட் இருவரும் வெவ்வேறு பிரச்சினைகளுக்காக புகார் அளிப்பதற்காக வந்துள்ளனர். அப்போது, இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதல் […]
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய கடற்படைக்கு கண்டனம் தெரிவித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,’தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் வீரவேல் படுகாயம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். ஏற்கனவே இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலால் தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், தற்போது நமது கடற்படையே (இந்திய கடற்படை) நமது மீனவர்கள் மீது தாக்குதல் […]
காயமடைந்த மீனவர் வீரவேலுக்கு தரமான மருத்துவம் அளித்து அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை. நேற்று நள்ளிரவில் இந்திய எல்லையில் மீன் பிடித்து வந்த தமிழக மீனவர்களை இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ரோந்து பணியில் இருந்த இந்திய கடலோர காவல்படையினர், குறிப்பிட்ட அந்த படகு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அந்த படகை எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. எச்சரிப்பையும் மீறி, அந்த படகு மீன்பிடித்த காரணத்தால் படகை நோக்கி காவல்படையினர் சுட்டதாகவும், அது தவறுதலாக […]
தெலுங்கானா, செகந்திராபாத்தில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்கள் மத்தியில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிசூடு வழக்கு தொடர்பாக இன்று 64 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர். தூத்துக்குடி துப்பாக்கிசூடு வழக்கு விசாரணையை ஜூன் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிசூடு வழக்கு தொடர்பாக இன்று 64 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகினர். கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியதால் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த போராட்டம் தொடர்பாக […]
உயிரிழந்த தூத்துக்குடி போராளிகளுக்கு வீரவணக்கம் என கனிமொழி எம்.பி ட்வீட். தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக,கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 13 பேர் பரிதாமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில்,தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இன்று 4-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தூத்துக்குடியில் தங்கள் மண்ணுக்காகவும், […]
ராணிப்பேட்டையில் நூதன முறையில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் தாக்கியதில், 4 பேர் மருத்துவமனையில் அனுமதி. ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கன்னிகாபுரம் என்ற கிராமத்தில் புஷ்கரன் என்பவர் அவரது தாய் மற்றும் பாட்டி ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டை நேற்று இரவு மர்ம நபர்கள் தட்டி உள்ளனர். அப்போது யார் என்று கேட்டுள்ளனர். அப்போது கத்தியை காட்டி மிரட்டி, வீட்டை உடைக்க முயன்றனர். இதனை சுதாரித்துக்கொண்ட புஸ்கரன் மற்றும் அவரது தாய் கதவை திறக்க மறுப்பு […]
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு போலீசார் நடத்தில் துப்பாக்கி சூட்டில் முக்கியமான 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு போலீசார் நடத்திய என்கவுண்டரில் லக்ஷர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய இரண்டு முக்கியமான தீவிரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 2 தீவிரவாதிகளும் லக்ஷர் இ தொய்பா இயக்கத்தின் நிழல் அமைப்பான டி.ஆர்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அலூச்சி பாக் எனும் இடத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் […]