ஓசிடி நோயால் பாதிக்கப்பட்டு ஒரு நாளைக்கு 10 மணி நேரம் குளிக்கும் ஐடி ஊழியர்.!

- பெங்களூரை சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் ஓசிடி(obsessive compulsive disorder) என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
- இதனால் அந்த ஐடி ஊழியர் ஒரு நாளைக்கு குறைந்தது பத்து மணி நேரத்திற்கு அதிகமாக குளித்துள்ளார்.
பெங்களூரை சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் ஓசிடி(obsessive compulsive disorder) என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் செய்த செயல்களை மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை வரை சென்றதுண்டு.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெங்களூரை சேர்ந்த ஐடி ஊழியர் ஒரு நாளைக்கு குறைந்தது பத்து மணி நேரத்திற்கு அதிகமாக குளித்துள்ளார். தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து குளிக்க தொடங்கும்இவர் காலை 7 மணிவரை குளிப்பார்.பின்னர் அலுவலகம் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து குறைந்தது நான்கு மணி நேரம் குளிப்பார்.
இந்த நோயிலிருந்து மீட்க போராடிய இவரது மனைவியும் இவர் விவாகரத்து செய்து விட்டதாக இவரது உறவினர்கள் கூறுகின்றனர். இவரின் இந்த செயலை பார்த்து இவரது தந்தை மிகவும் வருத்தம் அடைந்துள்ளார். இந்நிலையில் அந்த ஐடி ஊழியர் தற்போது மருத்துவரை அணுகி உள்ளார்.
இதனால் தற்போது மருத்துவர்கள் சிகிச்சை கொடுத்து வருகின்றனர். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் , மன உளைச்சல் காரணமாக இது போன்ற மன நோயால் பாதிக்கப்படுவதாகவும் தற்போது அந்த ஐடி ஊழியருக்கு சிகிச்சைகள் தொடக்கி உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறினர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
நேபாளத்தில் இன்று அதிகாலையில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. பீகாரிலும் லேசான அதிர்வு.!
February 28, 2025
தமிழ்நாடு வெல்லும்: “இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா?” – முதல்வர் ஸ்டாலின் .!
February 28, 2025
சீமான் வீட்டு காவலாளிகளுக்கு மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
February 28, 2025
தமிழ்நாட்டின் இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை மையம்!
February 28, 2025