9 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் களமிறங்கும் இஸ்ரோ… நவம்பரில் இரண்டு ராக்கெட்களி ஏவ திட்டம்….

Default Image

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பூமி கண்காணிப்புக்காக ‘ஜிசாட்-1’ என்ற செயற்கைகோளை கடந்த பிப்ரவரி மாதம் இந்திய விண்வெளி ஆய்வு மையமான  இஸ்ரோ தயாரித்து இருந்தது.

இதனை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி எப்-10 என்ற ராக்கெட் மூலம் கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி மாலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவ இருந்தனர். ஆனால், இறுதிகட்டப் பணியான ‘கவுண்ட் டவுன்’ தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. எனவே , ராக்கெட் ஏவும் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. பிறகு கொரோனா பரவல் காரணமாக தற்போது 9 மாத இடைவெளிக்கு பிறகு இந்திய மண்ணில் இருந்து வருகிற நவம்பர் மாதம் பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 2 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. இதற்கான பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதுதொடர்பாக ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மைய கட்டுப்பாட்டாளர் சீனிவாசுலு ரெட்டி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- பி.எஸ்.எல்.வி. சி-49, பி.எஸ்.எல்.வி. சி-50 ஆகிய 2 ராக்கெட்டுகளை விண்ணுக்கு செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - AUS vs IND
muthu ,meena (4) (1)
Suburban Railway - MTC Chennai
SPVelumani
Seeman - Rajini
goat vijay sk rajinikanth