இந்தியா-அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது
இந்தியா-அமெரிக்கா இடையே டெல்லியில் 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்திய மற்றும் அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டும் இந்திய, அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, செயலாளர் மார்க் டி எஸ்பர் ஆகியோர் விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தனர்.
இந்நிலையில் மூன்றாவது 2+2 பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் தொடங்கியுள்ளது.இந்தியா சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளனர்.அமெரிக்கா சார்பில், வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, செயலாளர் மார்க் டி எஸ்பர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.இதில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது.