இந்தியா அமைதி காக்கிறது.. அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்.. பிரதமர் எச்சரிக்கை!

Default Image

லடாக் எல்லை பகுதியில் நேற்று இரவு நடந்த மோதல் குறித்து பிரதமர் மோடி, இந்தியா அமைதியை விரும்புகிறது எனவும், மீறி அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட  மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் தற்பொழுது தொடங்கியது. இதில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், கர்நாடகா, பீகார், தெலுங்கானா மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தின்போது பிரதமர் மோடி இறந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், நாட்டின் ஒருமைப்பாடு மிகவும் முக்கியமானது என தெரிவித்த மோடி, இந்தியா அமைதியை விரும்புகிறது எனவும், மீறி அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்தார். அதுமட்டுமின்றி, எல்லையில் வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீண்போகாது என அந்த உரையில் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil news live
Chennai Super Kings IPL Auction
India won the Test Match
Heavy Rain - cyclone
meena (10) (1)
Red Alert - Heavy Rains
Tamilnadu Speaker Appavu