கர்நாடகாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் 10,145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 6,40,661 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இன்று ஒரே நாளில் 8,989 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 5,15,782 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது, மருத்துவமனையில் 1,15,574 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வாருகின்றனர். இதற்கிடையில், இன்று ஒரே நாளில் 67 பேர் உயிரிழந்ததால் இதுவரை, பலியானவர்களின் எண்ணிக்கை 9,286 ஆக உயர்ந்துள்ளன கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.