#Breaking:மக்களே கவனம்…மீண்டும் 2 ஆயிரத்தை நோக்கி தினசரி கொரோனா பாதிப்பு!

Default Image

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,938 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு;67 பேர் இறப்பு.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 1,778 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 1,938 ஆக அதிகரித்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 190 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,30,14,687 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இறப்பு எண்ணிக்கை:

கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 62 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 67 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை இந்தியாவில் 5,16,672 பேர் உயிரிழந்துள்ளனர்.

குணமடைந்தோர்:

தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 2,531 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,24,75,588 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா சிகிச்சை:

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை நேற்று 23,087 ஆக இருந்த நிலையில்,தற்போது 22427 ஆக குறைந்துள்ளது.

தடுப்பூசி:

நாடு முழுவதும் இதுவரை 1,82,23,30,356 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 31,81,809 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்