அதிர்ச்சி..!3 ஆண்டுகளுக்கு முன் இறந்தவருக்கு கொரோனா தடுப்பூசி...!

In Gujarat, an SMS message has come in that Hardasbhai Karingia, who died 3 years ago, has been vaccinated against corona.

குஜராத்தில்,3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில்,கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில்,குஜராத்தில்,3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஹரதாஸ்பாய் கரிங்கியா என்பவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக தற்போது எஸ்எம்எஸ் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது,குஜராத்தில் உப்லெட்டாவில் வசிக்கும் ஹரதாஸ்பாய் கரிங்கியா என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டில் காலமானார்.பின்னர்,அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரது இறப்புச் சான்றிதழை சம்பந்தப்பட்ட துறையிலிருந்து பெற்றனர்.இந்த நிலையில்,ஹரதாஸ்பாய் கரிங்கியா இறந்து மூன்று ஆண்டுகள் கழித்து,அவர் தனது முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை மே 3 ஆம் தேதியன்று போட்டுக்கொண்டதாக அவரின் குடும்பத்தினரின் மொபைல் போனுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது.

இதுகுறித்து அவரது மருமகன் அரவிந்த் கரிங்கியா கூறுகையில்,”இது எப்படி சாத்தியம் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை”,என்று அதிர்ச்சியுடன் கூறினார்.

unknown node

இதற்கு முன்னதாக,இதேபோன்ற வழக்கு தஹோடில் பதிவாகியுள்ளது, அதாவது,நரேஷ் தேசாய் என்பவர் சமீபத்தில் கோவின் நிறுவனத்திடமிருந்து எஸ்எம்எஸ் ஒன்றைப் பெற்றார்,அதில் அவரது தந்தை நட்வர்லால் தேசாய்க்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், நட்வர்லால் தேசாய் 2011 ஆம் ஆண்டிலேயே இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம்,நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் கொரோனா தடுப்பூசிகளின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில் இதுபோன்ற உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.