பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 25 முறைக்கும் மேலாக குத்தி கொல்லப்பட்ட 62 வயது முதியவர் -30 வயது இளைஞர் கைது...!

In Delhi, police have arrested a 30-year-old man who raped a 62-year-old woman and stabbed her more than 25 times

டெல்லியில்,62 வயதுடைய பெண் ஒருவர்,பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 25 முறைக்கும் மேலாக குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 30 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியின் புதிய அசோக் நகரில் வசிக்கும் ஒரு வயதான காய்கறி விற்பனையாளரான வயதான பெண்(62 வயது) ஒருவர் தனது வீட்டில், ஞாயிற்றுக்கிழமையன்று தனியாக இருந்த போது,அதே பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர்,அவரை பாலியல் பலாத்காரம் செய்து,பின்னர் 25 முறைக்கும் மேலாக அவரை கத்தியால் குத்தியும்,அவரது தொண்டையில் வெட்டியும் கொலை செய்துள்ளார்.

அதன்பின்னர்,ஒரு வங்கியில் பாதுகாப்புக் காவலராகப் பணிபுரியும் அந்தப் பெண்ணின் இளைய மகன் வீடு திரும்பியபோது,அவரது தாய் இரத்த வெள்ளத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.பின்னர்,அவர் தனது அம்மாவை தர்மசிலா மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.ஆனால், அவரது அம்மா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும்,மருத்துவமனை ஊழியர்கள் இந்த விஷயத்தை போலீசில் தெரிவித்தனர்.இதனையடுத்து,சி.சி.டி.வி காட்சிகளைப் பயன்படுத்தி கொலையாளியான 30 வயது இளைஞரை போலீசார் கைது செய்து,பின்னர் அவர்மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தும்,விசாரணை நடத்தி வருகின்றனர்.