தினமும் 5 முறை அனுமன் மந்திரம் கூறினால் கொரோனா ஒழிந்து விடும்..பாஜக எம்.பி.!

கொரோனாவை ஒழிக்க ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வரைதினமும் 5 முறை அனுமன் மந்திரத்தை கூறுகள் என பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் கூறியுள்ளார்.
பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை தினமும் 5 அனுமன் மந்திரம் கூறினால் கொரோனா ஒழிந்து விடும் என கூறினார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கொரோனா தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவர மக்களுக்கு நல்ல ஆரோக்கியம் வேண்டும் என்று நாம் அனைவரும் சேர்ந்து ஒரு ஆன்மீக முயற்சியை மேற்கொள்வோம்.
ஜூலை 25-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வரை உங்கள் வீடுகளில் தினமும் 5 முறை அனுமன் மந்திரத்தை கூறுகள் என கூறினார். மத்தியபிரதேசத்தில் ஊரடங்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி உடன் முடிவடைந்தாலும், அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும், ஆகஸ்ட் 5 ஆம் தேதி இந்த பூஜை நிறைவடையும். இதை நாம் தீபாவளி போன்று கொண்டாட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
आइए हम सब मिलकर कोरोना महामारी को समाप्त करने के लिए लोगों के अच्छे स्वास्थ्य की कामना के लिए एक आध्यात्मिक प्रयास करें आज25 से 5 अगस्त तक प्रतिदिन शाम 7:00 बजे अपने घरों में हनुमान चालीसा का 5 बार पाठकरें5 अगस्त को अनुष्ठान का रामलला की आरती के साथ घरों में दीप जलाकर समापन करें pic.twitter.com/Ba0J2KrkA8
— Sadhvi Pragya singh thakur (@SadhviPragya_MP) July 25, 2020
அயோத்தியில் ராம் கோயில் கட்டுவதற்கான “பூமி பூஜை “வருகின்ற ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025