பிரணாப் முகர்ஜி மறைந்த செய்தி மிகுந்த மன வேதனை அளிக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் ட்விட்டரில் இரங்கலை தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் உயிரிழந்த செய்தியை அவரின் மகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரணாப் முகர்ஜி மறைவிற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், முன்னாள் குடியரசுத் தலைவர், மத்திய நிதி அமைச்சர், சிறந்த சமூக சேவகர் பிரணாப் முகர்ஜி மறைந்த செய்தி மிகுந்த மன வேதனை அளிக்கிறது. அவர், நம் இந்திய நாட்டின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் முன்னிறுத்துபவர் என்றும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
unknown node