எந்த ஆவணமும் இல்லாமல் இலவச பான் கார்டு பெறுவது எப்படி...?

எந்த ஆவணமும் இல்லாமல் இலவச பான் கார்டு பெறும் வழிமுறைகள்.

எந்த ஆவணமும் இல்லாமல் இலவச பான் கார்டு பெறும் வழிமுறைகள்.

இன்று, PAN அட்டை என்பது மிக முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாகும். PAN அட்டை 10 இலக்க ஆல்ஃபாநியூமெரிக் PAN எண்ணுடன் வரும் மிக முக்கியமான ஆவணம் ஆகும். இந்த பான் கார்டு, பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் மற்றும் அன்றாட வாழ்வில் மிகவும் தேவைப்படும் ஒன்றாகும். சமீபத்தில், மத்திய அரசு இந்திய குடிமக்கள் தங்கள் ஆதார் அட்டையை பான் கார்டுடன் இணைப்பதை கட்டாயமாக்கியது.

unknown node

அந்த வகையில், பான் கார்டை தற்போது இலவசமாக பெற முடியும். ஆனால், பான் கார்டை பெற, ஆதார் எண் மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஏனென்றால்,  இது ஒரு முக்கிய ஆவணம் என்பதால், ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே கட்டணமின்றி பான் கார்டைப் பெற முடியும்.  அதாவது, உடனடி PAN வெளியீடு (instant PAN issuance) ஆதார் அடிப்படையிலான eKYC பயன்பாட்டை உள்ளடக்கியது.

இலவசமாக பான் கார்டை பெறுவது எப்படி?

unknown node

புதிய வருமான வரி இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில், ‘Instant PAN’-க்கு செல்ல வேண்டும்.

இந்த வசதி இ-பான்-ஐ ரியல் டைம் அடிப்படையில் வழங்குகிறது. இது PDF வடிவத்தில் வருகிறது.

பின்னர் ‘Get new E-PAN’-ஐக் கிளிக் செய்யவும்

அதன்பிறகு உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு, நான் அதை உறுதிப்படுத்துகிறேன் என்று செக் பாக்ஸில் சரிபார்க்கவும்.

பின்னர் வருமான வரித்துறை சில விஷயங்களில் உங்கள் பதில்களைக் கேட்கும்.

வருமான வரித்துறை கேள்விகள் :

unknown node

எனக்கு இதற்கு முன்னர் PAN அளிக்கப்பட்டதில்லை.

எனது செயலில் உள்ள மொபைல் எண் ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

எனது பிறப்பு விவரங்கள் முழுவதும் ஆதார்-இல் உள்ளன.

பான் விண்ணப்ப தேதியின்படி நான் மைனர் அல்ல.

இவற்றுக்கான உறுதிப்பாட்டை நீங்கள் அளித்த பிறகு, பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதை உள்ளிட்டவுடன், 15 இலக்க ஒப்புதல் எண் உருவாக்கப்படும்.

பான் நகல் உருவாக்கப்பட்ட பிறகு ஆதார் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் ஐடிக்கு அது அனுப்பப்படும்.