இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல்; 4% வாக்குகள் மட்டுமே பதிவு!

Default Image

இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் 4% வாக்குகள் மட்டுமே பதிவு என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

இமாச்சல பிரதேசத்தில் உள்ள 68 சட்ட பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் மாதம் 12-ஆம் தேதி (இன்று) தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, இன்று இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 68 சட்ட பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சுமார் 8 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 412 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் 56 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இமாச்சல பிரதேச தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 4.63% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - TN Rain
Kamala Harris - US Election
06.11.2024 Power Cut Details
VCK Leader Thirumavalavan - Tamilnadu CM MK Stalin
yellow alert rain
VCK Leader Thirumavalavan - TVK Leader Vijay
Sunil Gavaskar