கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பிய அமைச்சர் சத்யேந்திர ஜெயின்.!
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் டிஸ்சார்ஜ்
கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த வீட்டிற்கு சென்றார் அமைச்சர் சத்யேந்திர ஜெயின்.
சமீபத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.