நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியீடு…!

செப்டம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
வருகிற செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெற உள்ள முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வும், 12 ஆம் தேதி இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வும் நடைபெற உள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் மொத்தம் 198 நகரங்களில் நடைபெற உள்ள இந்த தேர்வு, மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்வு எழுதக் கூடிய நபர்கள் தங்கள் தேர்வு மையம் குறித்த தகவல்களை https://neet.nta.nic.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். தற்பொழுதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் http://neet.nta.nic.in எனும் இணையதளத்திலும், செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெற உள்ள முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை nbe.edu.in எனும் இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அன்னைக்கே தெரியும்..சிவகார்த்திகேயன் வளர்ச்சி குறித்து ஷாம் என்ன சொன்னார் தெரியுமா?
February 25, 2025
ரொம்ப மோசமான பார்ம்…இந்தியாவின் B டீமை கூட பாகிஸ்தான் தொட முடியாது..சுனில் கவாஸ்கர் பேச்சு!
February 25, 2025
இந்தி எது ஆங்கிலம் எது ? விமர்சனம் செய்த அண்ணாமலை!
February 25, 2025