ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கி சண்டை...!

A gun battle has broken out between terrorists and security forces in Rajouri district of Jammu and Kashmir.

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள ராஜோரி மாவட்டம் தனமண்டி என்னும் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசியமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் தனமண்டி பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பொழுது அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனை அடுத்து பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.