வங்கக்கடலில் உருவாகிறது 'குலாப்' புயல் – இந்திய வானிலை ஆய்வு மையம்!

The deep depression formed in the Bay of Bengal is expected to intensify into a storm in the next 12 hours.

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வந்த நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

புதிதாக உருவாகக் கூடிய இந்த புயலுக்கு பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்ட குலாப் எனும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா இடையே  26-ஆம் தேதி மாலை கரையைக் கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.