சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில், கடந்த 6 மணி நேரத்தில் 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் சின்னம் தற்பொழுது, நாகப்பட்டினத்திற்கு தெற்கே – தென்கிழக்கே 420 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கே-தென்கிழகே 530 கிமீ தொலைவிலும் மத்திய இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் நிலவிவருகிறது. இது தொடர்ந்து வடக்கு […]
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குக்கு பருவமழை தொடங்கியுள்ள காரணத்தால், வருகின்ற டிசம்பர் மாதம் வரும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், கடல்களில் காற்றழுத்த தாழ்வுகளும் உருவாகி வருகிறது. அந்த வகையில், வருகின்ற 21-ஆம் தேதி வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது. அதன்பிறகு, இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறி வடக்கு வடமேற்கு திசையை நோக்கி […]
சென்னை : இந்தாண்டின் 2வது புயல் நாளை உருவாகும், அந்த புயலுக்கு ASNA என பெயரிடப்படும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 – 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. […]
புயல் எச்சரிக்கை : வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறிய நிலையில், புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நேற்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (19.07.2024) காலை 0530 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், காலை 8.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வழுபெற்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் […]
‘மிக்ஜாம்’ புயல் ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இருந்து 80 கிலோமீட்டர் தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே நாளை பிற்பகல் புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘மிக்ஜாம்’ புயல் சென்னையில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசை நோக்கி நகர்கிறது. தமிழ்நாட்டை விட்டு புயல் விலகி சென்ற நிலையில் சென்னையில் தற்போது மழை குறைய தொடங்கியுள்ளது. புறநகர் ரயில் சேவை: ‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு காரணமாக அனைத்து வழித்தடங்களிலும் […]
மாண்டஸ் புயல் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும். மாண்டஸ் புயல், சென்னைக்கு 270 கிலோ மீட்டர் தென் கிழக்கே தீவிரப் புயலாக வங்க கடலில் மாண்டஸ் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரத்தில் மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
மாண்டஸ் புயல் எதிரொலியாக 24 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை காலை வரை தீவிர புயலாக நகர்ந்து, பின்னர் சற்று வலுகுறைந்து மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் புதுச்சேரிக்கு இடையே புயல் கரையை கடக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், மாமல்லபுரத்திற்கு அருகே இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் எதிரொலியாக 24 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]
13 மாவட்டங்களில் கன மழை இருக்கும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் கடிதம். வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக வலுப்பெற்றது. மாண்டஸ் புயல் நெருங்கிவரும் நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், சென்னையில் இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் […]
10-ஆம் தேதி வரை கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக வலுப்பெற்றது. மாண்டஸ் புயல் நெருங்கிவரும் நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்க தொடங்கும்.10-ஆம் தேதி வரை கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்பதால் மீனவர்கள் […]
இன்று நள்ளிரவு முதல் தரைக்காற்று மற்றும் கடல் சீற்றம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக வலுப்பெற்றது. மாண்டஸ் புயல் நெருங்கிவரும் நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் தரைக்காற்று மற்றும் கடல் அலையின் சீற்றம் அதிகரித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் தரைக்காற்று மற்றும் கடல் சீற்றம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு […]
கடலூர், நாகை, தூத்துக்குடி, பாம்பனில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக வலுப்பெற்றது. மாண்டஸ் புயல் நெருங்கிவரும் நிலையில், சென்னையின் பல இடங்களில் லேசான மழை தொடங்கியுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு அரபு அமீரகம் பரிந்துரைத்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடலூர், நாகை, தூத்துக்குடி, பாம்பனில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது. கல்பாக்கம், கடலூர், மரக்காணம் பகுதியில் கடும் கடல் சீற்றத்தால் மீனவர்கள் […]
புயல் காரணமாக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் இன்று புயலாக வலுப்பெற்று வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த பெயர் வைக்கப்பட உள்ளது. இந்த நிலையில், புயல் காரணமாக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், தூத்துக்குடி, காரைக்கால், பாம்பன் மற்றும் காட்டுப்பள்ளி ஆகிய இடங்களில் […]
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். அந்தமான் அருகே வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வந்த நிலையில், தற்போது அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. மேலும் இது வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் பின்னர் அது வலுவடைந்து புயலாக மாறக்கூடும் என்றும் வானிலை […]
வங்கக் கடலில் ‘அசானி’ புயல் உருவானதை குறிக்கும் விதமாக 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது. வங்கக்கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மதியம் ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால், தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளதாகவும்,அதற்கு ‘அசானி’ என பெயர் வைத்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 12 மணி நேரத்தில் அசானி புயல் தீவிர புயலாக வலுபெற்று ஆந்திரா,ஒடிசா கடற்கரையை […]
நேற்று காலை தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது. புயலாக வலுப்பெறும் நேற்று காலை தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை […]
மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை தமிழ்நாடு,புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட நிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் (19)-ஆம் தேதி முதல் 21ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட ம் 3 டிகிரி செல்சியஸ் வரை […]
2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் ஜாவத் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திர கடலோரம் மற்றும் தெற்கு ஒடிசா கடலோரம் நோக்கி செல்லும், ஜாவத் புயல் நாளை ஆந்திர கடலோரத்தை அடையும்போது மணிக்கு 90 கி.மீ முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 5-ஆம் தேதி ஒடிசாவின் பூரி கடற்கரை அருகே ஜாவத் புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]
டிச.2 வது வாரத்தில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் தற்போது நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும்,அடுத்த 12 மணி நேரத்தில் அது ஜாவத் புயலாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. Depression intensified into Deep Depression over westcentral adjoining southeast Bay of Bengal at 0530 IST […]
அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது,நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும்,மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் மற்றும் குமரிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதனால்,பல்வேறு பகுதிகளில் சாலைகள் மற்றும் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,அந்தமான் கடல் […]